Wednesday 4 May 2011

சென்னை கிங்ஸ் மீண்டும் வெற்றி: ராஜஸ்தான் அணி பரிதாபம்

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.

நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வார்ன், பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை. ராஜஸ்தான் அணியில் அமித் சிங் நீக்கப்பட்டு, நயன் தோஷி சேர்க்கப்பட்டார்.

நல்ல துவக்கம்: ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், டிராவிட் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. துவக்கத்தில் இருந்தே இருவரும் மாறி, மாறி பவுண்டரிகளாக விளாச, 6.4 ஓவரில் ஸ்கோர் 50ஐ கடந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 10 ஓவரில் 86 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் 32 ரன்கள் எடுத்த வாட்சன், ஜகாதி சுழலில் அவரிடமே சிக்கினார்.

டிராவிட் அபாரம்: மறு முனையில் ரந்திவ் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார் டிராவிட். அஷ்வின் ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் அடித்த, இவர் ராஜஸ்தான் அணிக்காக முதல் அரைசதம் கடந்தார். இந்நிலையில் மேனரியா (2), ஜோகன் போத்தா (8) அடுத்தடுத்த நிமிடங்களில் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிட் 65 (51 பந்து, 10 பவுண்டரி) ரன்களில் அவுட்டானார்.

மார்கல் அபாரம்: அடுத்து வந்த ரகானேவை (4), மார்கல் விரைவில் அனுப்பினார். அடுத்த பந்தில் அதிரடி ராஸ் டெய்லரையும், 20 ரன்னில் வெளியேற்றினார். 20 ஓவரின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. ஸ்டூவர்ட் பின்னி (7), ஹரேந்திரா (1) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் பவுலிங்கில் அசத்திய ஜகாதி, மார்கல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

விஜய் ஏமாற்றம்: எட்டிவிடும் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி ஜோடி துவக்கம் தந்தது. கடந்த போட்டியில் கைவிட்ட முரளி விஜய் (5), இம்முறையும் ஏமாற்றினார். பின் மைக்கேல் ஹசியுடன், ரெய்னா இணைந்தார்.

"பெஸ்ட்' ஜோடி: இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒன்றும், இரண்டுமாக ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். பின் போகப் போக அதிரடிக்கு மாறினர். தோஷியின் ஓவரில் மைக்கேல் ஹசி, சென்னை அணிக்காக முதல் சிக்சரை அடித்தார். கடைசி பந்தில் ரெய்னா, தன் பங்கிற்கு ஒரு "சூப்பர்' சிக்சரை விளாச, இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுக்கப்பட்டது.

இரண்டு அரைசதம்: ஸ்டூவர்ட் பின்னி ஓவரில் அடுத்தடுத்து, இரண்டு பவுண்டரிகள் விளாசிய மைக்கேல் ஹசி, இத்தொடரின் மூன்றாவது அரைசதம் கடந்தார். மறுமுனையில் ரெய்னாவும் இத்தொடரின் மூன்றாவது அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து மிரட்டிய மைக்கேல் ஹசி, மேனரியா பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு அனுப்பினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 100 பந்துகளில் 137 ரன்கள் சேர்த்த நிலையில், 61 ரன்கள் எடுத்த ரெய்னா அவுட்டானார். பின் திரிவேதி பந்தில், மைக்கேல் ஹசி அசத்தலாக பவுண்டரி விளாச, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 18.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
55 பந்துகளில் 79 ரன்கள் (ஒரு சிக்சர், 8 பவுண்டரி) விளாசி, அவுட்டாகாமல் இருந்த மைக்கேல் ஹசி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

ஸ்கோர்போர்டு

ராஜஸ்தான் ராயல்ஸ்
வாட்சன்(கே)+(ப)ஜகாதி 32(26)
டிராவிட்(கே)விஜய்(ப)ரந்திவ் 66(51)
மேனரியா(கே)விஜய்(ப)அஷ்வின் 2(8)
போத்தா(கே)ரெய்னா(ப)ஜகாதி 8(6)
டெய்லர்(கே)ஹசி(ப)மார்கல் 20(14)
ரகானே(கே)+(ப)மார்கல் 4(8)
பின்னி-அவுட் இல்லை- 7(7)
ஹரேந்திரா-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 7
மொத்தம் (20 ஓவரில், 6 விக்.,) 147
விக்கெட் வீழ்ச்சி: 1-86(வாட்சன்), 2-92(மேனரியா), 3-109(போத்தா), 4-117(டிராவிட்), 5-139(ரகானே), 6-139(டெய்லர்).
பந்து வீச்சு: மார்கல் 4-0-24-2, போலிஞ்சர் 4-0-28-0, அஷ்வின் 4-0-36-1, ஜகாதி 4-0-22-2, ரந்திவ் 4-0-32-1.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி-அவுட் இல்லை- 79(55)
முரளி விஜய்-எல்.பி.டபிள்யு(ப)போத்தா 5(6)
ரெய்னா(கே)போத்தா(ப)திரிவேதி 61(51)
மார்கல்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 4
மொத்தம் (18.4 ஓவரில், 2 விக்.,) 149
விக்கெட் வீழ்ச்சி: 1-8(முரளி விஜய்), 2-145(ரெய்னா).
பந்து வீச்சு: தோஷி 2-0-24-0, ஜோகன் போத்தா 4-0-22-1, வாட்சன் 4-0-27-0, திரிவேதி 3.4-0-37-1, வார்ன் 3-0-14-0, ஸ்டூவர்ட் பின்னி 1-0-12-0, மேனரியா 1-0-13-0.

No comments:

Post a Comment