Saturday, 30 April 2011

உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 2 கோடியாக உயர்வு




உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை தருவதாக அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது பரிசுத் தொகையை ரூ. 2 கோடியாக உயர்த்தியுள்ளது.

இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை சமீபத்தில் கைப்பற்றியது இந்தியா. உலகக்கோப்பையை இந்தியா வெல்வது இது 2வது முறையாகும். இதையடுத்து இந்திய வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு தருவதாக கிரிக்கெட் வாரிய்ம் அறிவித்தது.

ஆனால் இந்தப் பணம் போதாது என்று இந்திய வீரர்களில் பலர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. தலா ரூ. 5 கோடியாவது தர வேண்டும் என்று வீரர்கள் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்தத் தொகையை தர வாரியம் முன்வரவில்லை. அதேசமயம், பரிசுத் தொகையை ரூ. 2 கோடியாக உயர்த்தியுள்ளது வாரியம்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிலைக்குழு முடிவெடுத்து அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் என்.சீனிவாசன் வெளியிட்டுள்ள பத்திரிக்கைக் குறிப்பில், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கான பரிசுத் தொகை ரூ. 1 கோடியிலிருந்து 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment