Saturday 30 April 2011

டெஸ்ட் போட்டிகளிருந்து ஓய்வு: மலிங்கா அதிரடி; இலங்கை அதிர்ச்சி!!

இலங்கையின் அதிரடி வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க. சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பைப் போட்டியிலும், தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டியிலும் பந்துவீச்சில் எதிரணி வீரர்களை கதிகலங்க வைத்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இப்போது விளையாடி வருகிறார் மலிங்கா.

உலகக் கோப்பை போட்டி முடிந்த கையோடு, அவர் இந்தியாவில் தங்கி மூட்டுப் பிரச்சினைக்காக சிகிச்சைப் பெறப் போவதாக அறிவித்தார். எனவே நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் இலங்கை அணியில் அவர் இடம்பெறவில்லை.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து ஆடி வருகிறார். இதனால் இலங்கை கிரிக்கெட் நலனை விட பணத்துக்குதான் அதிக முக்கியத்துவம் தருகிறார் மலிங்கா என்று இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இந்த நிலையில் இன்று அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ஆட விரும்புவதாகவும், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதிலிருந்து மட்டும் ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment