Saturday 23 April 2011

ஒபாமாவை விட செல்வாக்கு மிக்க டோணி!!

புகழ் பெற்ற டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவைவிட அதிக செல்வாக்கு மிக்கவராக இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணி பட்டியலிடப்பட்டுள்ளார்.

உலகின் பிரபலமான 100 பேர் பட்டியலை 'டைம்' வார இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி உள்பட 5 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
டோணி தலைமையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலக கோப்பையை பெற்றதையடுத்து அவருக்கு இந்தப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. 100 பேர் லிஸ்டில் அவர் 52வது இடத்தில் உள்ளார்.
உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவுக்கு இந்தப் பட்டியலில் கிடைத்துள்ள இடம் 86. அவருக்குக் கீழ் பணிபுரியும் ஹிலாரி கிளிண்டனுக்கு 43வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற இந்தியர்களான தொழில் அதிபர் முகேஷ் அம்பானி 61 வது இடத்திலும், நரம்பியல் துறையில் புதிய சாதனை நிகழ்த்திய வி.எஸ். ராமசந்திரன் 79வது இடத்திலும் உள்ளனர்.
ஐடி மற்றும் வர்த்தகத்தில் புதிய உத்திகளுக்காக அஜிம் பிரேம்ஜி, எழுத்தாற்றல் மூலமாக ஊழலுக்கு எதிரான புரட்சியை ஏற்படுத்திய அருணா ராய் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே 9 வது இடத்திலும், பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் அகமது ஷுஜா பாஷா 17 வது இடத்திலும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க் 6 வது இடத்திலும் உள்ளனர்.
முதல் இடம் 30 வயதே நிரம்பிய வேல் கோனிமுக்கு கிடைத்துள்ளது. இவர்தான் எகிப்திய புரட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதால் இந்த பெருமை.
25 பேருடன் இவர் ஆரம்பித்த பரப்புரையின் விளைவுதான் பின்னர் 1.20 கோடி மக்கள் இயக்கமாக மாறி, ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகச் செய்தது. கூகுளில் பணியாற்றும் ஒரு இளம் அதிகாரி கோனிம்.
இரண்டாம் இடம், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸுக்கு கிடைத்துள்ளது.
மூன்றாவது இடம் பெற்றிருப்பவர் பொழுதுபோக்குத் துறையில் பெரும் சாதனைகள் படைத்த நெட்பிலிக்ஸ் நிறுவன சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ்

No comments:

Post a Comment