திருச்சி: திருச்சியைச் சேர்ந்த பெல் (பிஎச்இஎல்) நிறுவனம், நிலக்கரி மின் உற்பத்திக்கான நிறுவுதல் மற்றும் விநியோகம் போன்றவற்றுக்காக ரூ. 5,450 கோடிக்கான புதிய ஆர்டரை பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசம் லலித்பூரில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைய உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பஜாஜ் ஹிந்துஸ்தான் நிறுவனம் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த புதிய 660 மெவா அனல் மின்நிலையத்துக்கான சூப்பர் கிரிட்டிகல் கொதிகலன் மற்றும் டர்போ ஜெனரேட்டர் போன்றவற்றுக்கு ரூ. 5,450 கோடிக்கான ஆர்டரை திருச்சி பெல் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த உபகரணங்களில் பாய்லர்களை திருச்சியிலிருந்தும், பாய்லர் உதிரி பாகங்களை ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலையிலிருந்தும் தயாரித்து அனுப்ப உள்ளனர்.
பெல் நிறுவனத்தின் இந்த வருட சாதனைகளில் இது மிக முக்கியமானதாகும் என்று அதன் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment